padithadhi-pidithadhu.Save Trees-save earth‎..

தயவு செய்து மரத்தை நடுங்க , இதை எல்லோருக்கும்
சொல்லுங்க எவ்வளவு முக்கியம் என்று.

இப்பெல்லாம் சரியாக மழை இல்லை.அதனால் விளைச்சல் இல்லைன்னு ஒரே புலம்பல் மட்டும் தான் மிச்சம் நம்ம ஆளுங்ககிட்ட. ஒரு அடிப்படை புரிதலே இல்லை. அதனால்தான் நான் படித்ததை உங்களுக்கு புரியும்படி சொல்கிறேன்.

நாம எல்லோருக்கும் தெரியும் மேகம் தான் மழைக்கு காரணம்.

எப்படி மேகம் மழையா மாறுது ?

அடர்த்தி அதிகமாகும்போது மேகம் ஒரு பனிப்பாறை போல அதிக கனமுடையதாகிறது பிறகு புவியிர்ப்பு விசையால். மேகம் புவியின் மேற்பரப்பில் 15 இல்ருந்து 20 கிலோமீட்டரில் தொலைவில் பூமியை நோக்கி நகரும்போது பூமியின் வெப்பநிலை காரணமாக சிறு சிறு பனித்துளிகலாக பிரிக்கப்படுகிறது பிறகு 10 இல்ருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அதிக வெப்பத்தின் காரணமாக பனித்துளி உருகி மழைத்துளியாக மாறுகிறது.

அதெல்லாம் சரிதான் ,

மேகம் எப்படி உருவாகுது ?

நீர் ஆவியாதல் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள் அல்லது படித்திருப்பீர்கள் இதுதான் கரு மேகம் உருவாவதற்கு. பூமியின்
நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் சூரிய வெப்பத்தால் நீராவியாக மாறுகிறது இந்த நீராவியில் கோடிக்கணக்கான நீர்த்துளிகள் கண்ணுக்கு புலப்படாமல் காற்றில் கரைந்து மேல் செல்கிறது. பின்னர் அணுக்கருக்களின் விதிப்படி ஒன்றுடன் ஒன்றாக கலந்து அதே 15 இல்ருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ஈர்ப்பு விசை மற்றும் வெப்பத்தின் அளவு குறைவாக இருப்பதால் மேகமாக உருவாகிறது.

சரி, இதெல்லாம் இயற்கையின் சுழற்சிமுறை நாம தடுக்க முடியாது

ஏன் மழை சரிவர பொழிவதில்லை ?

புவி வெப்பமடைவதே இதற்கு காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். எவ்வாறு வெப்பம் மேகம் உருவாவதை தடுக்கிறது என்று பார்ப்போமா ? புவியின் மேல் 5 இல்ருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வெப்பத்தின் அளவு குறைவாக இருக்கும்போது மேலே குறிப்பிட்டபடிநீர்த்துளிகள் ஒன்று சேர்ந்து மேகமாக மாறதுவங்குகிறது . இந்த நீரவித்துளிகள் அந்த 5 கிலோமீட்டர் தொலைவை கடப்பதற்கு முன்பே பெரும்பாலானவை புவி வெப்பத்தால் காய்ந்துவிடுகிறது. அதனால் மேகத்தின் அடர்த்தி குறைவாகவும் சிலநேரங்களில் மேகம் உருவாகாமலும் இருக்கிறது. இதனால் மழை பொழிவு சரிவர இருப்பதில்லை.

ஏன் புவி வெப்பத்தின் அளவு அதிகமாய் இருக்கிறது முன்பைவிட ?

வளிமண்டலத்தில் அதாவது புவி மேற்பரப்பில் வாயுக்கள் இருக்கிறது என்று நமக்கு நன்றாக தெரியும் இதில் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜென் ,
வெளிவிடும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் இருக்கிறது. இந்த கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள்
சூரிய வெப்பத்தை உட்க்கொண்டு வெளிவிடும் தன்மை கொண்டது இந்த வாயுக்களின் அளவு அதிகமவதே புவி மேற்பரப்பு முன்பைவிட அதிக வெப்பமாக காணப்படுகிறது. அனால் ஆக்சிஜென் அவ்வாறு இல்லை.

எவ்வாறு மேற்குறிப்பிட்ட வாயுக்களின் அளவு அதிகமாகியது ?

மனிதன்தான் , சுகபோகமாய் வாழ்வதற்கு கண்டுபிடித்த படைப்புகளும் மற்றும் அதன் விளைவுகளை பற்றிய தொலைநோக்குப்பார்வை இல்லாமல் போனதுமே காரணம் என்று நான் ஆணித்தரமாக மற்றும் உரக்கச்சொல்லுவேன் இதை எவரும் மறுக்க இயலாது.
கார்பன் வெளிப்பாடு அளவுப்ப்ட்டியால் இதோ
http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_carbon_dioxide_emissions#List_of_countries_by_2011_emissions_estimates

இதில் இந்தியா மூன்றாவது இடம். இந்தியா புவியின் தென் துருவத்தில் இருப்பதால் அட்டவணையில் குறிப்பிட்ட மேல் இரண்டு நாடுகளை விட வெப்பம் அதிகமா இருக்கிறது குறிப்பாக தமிழ் நாட்டில்.

கீழே குறிப்பிட்டவைகள் முக்கிய காரணிகள்.

1. புதை படிவ எரிபொருட்கள் ( பெட்ரோல் , டீசல் …)
2. அதை உபயோகப்படுத்தும் உந்துவண்டிகளின் எண்ணிக்கை
அதிகமாகியது.(கார் , மோட்டார் சைக்கிள் ..)
3. ஏசி , ஹீட்டர்.
4. மனிதன், விலங்குகள்.

புதை படிவ எரிபொருட்களை எரிப்பதால் கார்பன்-டை-ஆக்சைடு போன்ற வாயுக்கள் வருகிறது இதற்கு

மரம் நடுவது எவ்வாறு தீர்வாகும் ?

மரங்கள் நாம் வெளிவிடும் கார்பன்-டை-ஆக்சைடை சுவாசித்து ஆக்சிஜெனை வெளிவிடும் தோரயமாக 100 அடி 18 இன்ச் அளவுள்ள மரம் சுமாராக 260 பவுண்ட்ஸ் ஆக்சிஜெனை வெளிவிடும் ஒரு வருடத்திற்கு என்று Canada’s national environmental agency சொல்கிறது. இதை ஒரு ஏக்கருக்கு வளர்த்தால் ஒரு கார் 26000 மைல்கள் சென்றால் எவ்வளவு கார்பன்-டை-ஆக்சைடை வெளிவிடுமோ அதை உட்கொள்கிறது.இது நியூயார்க் டைம்சில் வெளிவந்த செய்தி. அது மட்டும் இல்லாமல் சிறு சிறு நீர்த்துளிகளையும் வெளிவிடும் இந்த சுவாச சுழற்சிமுறையில் (photosynthesis) எனவே கார்பனின் அளவு குறையும், புவிவெப்பம் குறையும் மழை பொழியும் பருவத்தில் மரம் வளர்ப்பதால்…. ~arun

Advertisements