அரசியல் எங்களுக்கு பிடிக்கணும் – I

புது கட்சிகள் புது கட்சிகள் னு சொல்றாங்களே நீங்கலம் யாருப்பா ? கட்சிகளின் எண்ணிக்கை ஏற்கனவே ரொம்ப அதிகம் என்பது கூட எனக்கு நெருடலாக இல்லை .. ஆனால் இந்த புது கட்சிகள் குறைந்தது ஒரு வருடமாவது மக்கள் இயக்கமாக செயல்பட்டு பின்னர் அரசியலில் இறங்கவேண்டும் என்பது என் கருத்து .. அரசியலில் தனித்து நின்று உள்ளாட்சிகளை வலுபடுத்த வேண்டும். பின்னர் MLA.,MP… ஆனால் இந்த புது கட்சிகள் ஏற்கனவே இருக்கும் கட்சிகளுடன் இணைவது, ஆதரிப்பது எதற்கு ? அப்படி செய்ய அந்த கட்சியில் இனைந்து விடலாமே ?? எங்களை பொறுத்த வரையில் புதிய கட்சிகள் ஏற்கனவே காட்டிய பழைய படங்களையே ஓடவிடும் சினிமா கொட்டாய்கலாய் இல்லாமல் இருக்க வேண்டும் . கண்டிப்பாக ஒரு நாகரிகமான அரசியலை வெளிபடுத்த வேண்டும். உங்களின் செயல்பாடுகள், பேச்சுகளிலேயே தெரிந்துவிடும் உங்களின் நாகரிகம்.

அறிஞர் அண்ணா காலத்தில் கட்சி கூட்டங்கள மாலை நேர கல்லூரி என்பார்கள் . அது மாதரியான செயல்பாடுகள் வேண்டும். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். புகார்களை தெரிவிக்கையில் ஏன் நாங்கள் மட்டுமா செய்தோம் ., அவர்கள் அப்டி செய்தார்களே என்பது மாதரியான பேச்சுக்கலை கேட்டு கேட்டு …..

தற்போதைய குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் செய்தது என்ன என்றால் ., அதை விட்டுவிட்டு நாங்கள் 1990 லேய ., ௦ என்று பழைய அரைத்த மாவையே அரைக்க கூடாது ..

மொத்ததில் புதிய அரசியலை புதிய கோணத்தில் காண்பிக்க வேண்டும் அல்லது முயற்சி செய்ய வேண்டும் .

Advertisements